மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் பணவீக்கம் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது ஆண்டாக நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
* உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
நாட்டின் பணவீக்க அளவு கட்டுக்குள் உள்ளது
* ஜிஎஸ்டி வரி திட்டம் மிகப் பெரிய சீர்திருத்தம்
* நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
*2014-19 வரை, 28 ஆயிரத்து 400 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது
*கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் சேர்ந்துள்ளனர் மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பயன்கள் நேரடியாக செல்கிறது
* இதுவரை 40 கோடி பேர் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர்
* ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில் துறை முன்னேற்றம் அடைந்துள்ளது.
*மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பலன்கள் நேரடியாக சென்றடைந்துள்ளது.
*ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்திரவாதமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
* ஜிஎஸ்டியால் சராசரியாக மாத குடும்ப செலவினங்களில் 4 சதவீதம் வரை மிச்ச படுத்தபடுகிறது.
* மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
* நமது பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது.
* நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!
வெறிகொண்டு துரத்திய நாய்கள் கூட்டம்..தலை தெறிக்க ஓடிய சிறுவன்..!
ரிவர்ஸ் எடுத்த லாரி..2 லாரிகளுக்கு நடுவே நின்று உடல் நசுங்கி பரிதாபமாக பலியான நபர்..!
200 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!
வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!
கொல்கத்தாவில் மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்..!