--- --:--:-- --

திருப்பூரில் இம்பார்ட் சிறப்பு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு

a6eeff2a-e4d6-4995-96ea-70e8dfad547d

தமிழக அரசு, தமிழகம் முழுவதும் படிக்கும் 9 வது வகுப்பு மாணவர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த ஆய்வு மனப்பாண்மையை ஏற்படுத்திக்கொள்ளவும், சமூக முன்னேற்றத்தில் தங்களின் பங்கேற்பை மேம்படுத்திக் கொள்ளவும், வகுப்பறைகளில் மாணவர்களின் பங்கேற்பை (இம்பார்ட்) அதிகரிக்கவும் சமக்ர சிக்ஷா என்னும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சிறப்பு செயல்திட்ட ஆய்வு அறிக்கை குழு அமைத்து செயல்படுத்தி வருகிறது.

 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய கல்வி மாவட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் தனித்தனியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திட்டத்தின்கீழ் சமூகத்தை மேம்படுத்தக்கூடிய ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு நேற்று அந்தந்த கல்வி மாவட்ட பகுதிகளில் நடந்தது.

 

இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான ஆய்வு அறிக்கை காட்சி படுத்துதல் நிகழ்வு நேற்று ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் நடந்தது. முகாமில் 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திட்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து இருந்தனர். இவர்களிடம் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் குழுவை சேர்ந்த நடுவர்கள் மாணவர்களிடம் திட்ட அறிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு தேர்வு செய்தனர்.

முடிவில் தமிழில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலாவது இடத்தையும், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும், குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

 

இதேபோல் ஆங்கிலத்தில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பூமலூர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

 

கணிதத்தில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும், வெள்ளகோவில் துரை ராமசாமி நகர் அரசு உயர் நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும்., அறிவியலில் பூளவாடி, அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குண்டடம், அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும், குமாரானந்தபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

 

சமூக அறிவியலில் கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குண்டடம், அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்தையும், ப.வடுகபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஸ்வரி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

 

மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் வருகிற 6 ந் தேதி நாமக்கல்லில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon