--- --:--:-- --

“செருப்பு, துடைப்பமும் தப்பவில்லை!” மத்திய பட்ஜெட்டில் என்னென்ன பொருட்கள் விலை உயர்கிறது தெரியுமா?

df

மத்திய அரசின் பட்ஜெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட விலை உயரப்போகும் பட்டியல் தான் அதிகமாக நீள்கிறது. இதில் செருப்பு, துடைப்படும் கூட தப்பவில்லை. விலை குறையும் பொருட்களின் பட்டியலோ விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ளது.

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020- 2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை மிக நீண்ட நேரம் வாசித்தார். இந்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் வழக்கம் போல கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் ஆளும் பாஜகவோ நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என தம்பட்டம் அடிக்கிறது.

 

ஆனால், பொதுவாக இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு அளிக்கப்பட்ட வரிக் குறைப்பு மட்டுமே சலுகையாகப் பார்க்கப்படுகிறது. மற்றபடி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைவாசி உயரும் என்றே தெரிகிறது.

இந்த பட்ஜட்டில் வழக்கம் போல மதுபானங்கள், சிகரெட், புகையிலைப் பொருட்களின் விலை உயரப் போவது நிச்சயம். ஆனால் விலை உயரப்போகும் மற்ற பொருட்கள் விபரம்:

 

காலணிகள்,பர்னீச்சர் பொருட்கள், தரை விரிப்பான்கள், விளக்கு, ஒளிரும் அறிவிப்பு பலகைகள், இறக்குமதி மருத்துவ உபகரணங்கள்,வீட்டு சமையலறையில் உபயோகப்படுத்தப்படும் சீன செராமிக் பொருட்கள், களிமண் பொருட்கள், இரும்பு, செம்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பேட்லாக்ஸ், விளக்குமாறு ( துடைப்பம்), கை சல்லடை, சீப்பு, வேக்யூம் பிளாஸ்க்குகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

 

மின்சார பொருட்களில் பேன், கிரைண்டர், மிக்சி, ஷேவர்ஸ், முடி நீக்கும் உபகரணங்கள், வாட்டர் ஹீட்டர், ஓவன்கள், குக்கர், டோஸ்டர், காபி & டீ தயாரிக்கும் இயந்திரம், ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், பூச்சிகளை ஒழிக்கும் உபகரணம் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது

 

பேப்பர் ட்ரே, பைண்டர்ஸ், கிளிப்ஸ், ஸ்டேபிள்ஸ், அறிவிப்பு பலகை, பெயர்ப் பலகை, உலோகத்தில் உருவாக்கப்படும் பெயர், குறியீட்டு பலகைகள் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர்த்த பிற வாகனங்களின் உதிரி பொருட்கள், பொம்மைகள், மூன்று சக்கரம், ஸ்கூட்டர்ஸ், சில வகையிலான ஆல்கஹால் தயாரிப்புகள், செல்போன்கள், இறக்குமதி எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

 

விலை உயரும் பொருட்களின் பட்டியல் இப்படி நீளும் நிலையில், விலை குறைய வாய்ப்புள்ள பொருட்களின் பட்டியல் ரொம்பவே கம்மிதான். பட்டியல் இதோ:

 

இலகு ரக பேப்பர்கள், செய்தித்தாள் பேப்பர்கள், சுத்தமான சர்க்கரை, விவசாயம் மற்றும் கால்நடை அடிப்படையிலான பொருட்கள், சோயா , பதப்படுத்தப்பட்ட பால் ஆகிய பொருட்களின் விலை மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளது.

 

இந்த பட்ஜெட்டில், அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் பலவற்றின் விலை உயரப் போகிறது என்ற நிலையில் செருப்பு, துடைப்பம், கால்மிதி போன்றவவையும் தப்பவில்லை என்பது தான் பலரின் விமர்சனமாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon