காவல் ஆணையரை கடிந்துகொண்ட ஆளுநர்

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் நினைவு தின நிகழ்ச்சியின் போது அங்கு அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பகுதி காவல்துறை ஆணையரின் செயல் குறித்து அம்மாநில ஆளுநர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

 

பராக்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது ஆளுநர் ஜெகதீப் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறை ஆணையர் மனோஜ் என்பவர் விழாவின் முன் வரிசையில் அமர்ந்து சாவகாசமாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கடும் கோபமடைந்த ஆளுநர் பொது நிலையிலேயே காவல்துறை ஆணையரை கடிந்துகொண்டார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.


Leave a Reply