குற்றப் பிண்ணனி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடைகோரிய வழக்கு
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பாரதிய ஜனதாவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் உபாத்தியா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது தேசிய நலன் சார்ந்த முக்கியமான பிரச்சனை என நீதிபதிகள் கருத்து கூறினர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




