மண் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். குடியரசு தின கொண்டாட்டம் காரணமாக காலை 11 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு உரை நிகழ்த்தினார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்த மோடி பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகியவை குறித்து பகிர்ந்து கொண்டார். அசாமில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றதாக கூறினார்.
இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று கொண்டார்கள் என்றும் மிகவும் ஏழ்மையான மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை நிகழ்த்தியதாகவும் கூறினார்.
தமிழகத்தில் டிடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள யோகானந்தர் என்ற தொழிலாளியின் மகள் பூர்ணா ஸ்ரீ பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று அனைவரது இதயத்தையும் வெற்றி கொண்டதாக பெருமிதத்துடன் கூறினார்.
நீர் பாதுகாப்பிற்காக பல பரவலான முயற்சிகள் நாட்டின் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய மோடி தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் சேகரிப்புக்கான சாதனமாக பின்பற்றுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரதத்தின் வரலாற்று சிறப்புமிக்க சாதனமாகும் என்றும் புதிய பாரதத்தின் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.