ஒமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்:ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரைப்போலவே வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் கட்சியின் தலைவர்கள் நிலை பற்றியும் கவலைப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்தவித விசாரணையுமின்றி தலைவர்கள் அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாகவும் அனைத்து அரசியல் தலைவர்களையும் வீட்டு சிறையில் இருந்து மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply