விழுப்புரத்தில் மஞ்சள் காமாலையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவேரி பாக்கத்தை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக வாலாஜாபேட்டையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.
பின்னர் கணவர் காச நோயாளி எனக் கூறி அவரை பிரிந்த மீனாட்சி சென்னையில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் கர்ப்பமுற்ற மீனாட்சி ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் அருகே கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் கோலியனூர் வாய்க்காலில் குழந்தையை வீசி கொன்றுள்ளார். பிறகு தானம் குறித்த போது கால்வாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததால் மீனாட்சியின் எண்ணம் ஈடேறவில்லை. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மஞ்சள் காமாலை உடன் பிறந்ததால் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக மீனாட்சியை காவல்துறையிடம் கூறியுள்ளார்.