கடுப்பான கைதி ! குத்து வாங்கிய போலீஸ்!

அமெரிக்காவில் சிறைக்கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக முகத்தில் குத்து வீடியோ வெளியாகியுள்ளது. காவல்நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி கேப்ரியல் என்பவனை அதிகாரி ஒருவர் அழைத்துச் சென்றார்.

 

அப்போது நெஞ்சில் கை வைத்து சிறிது தள்ளியதால் ஆத்திரமடைந்த அவன் அதிகாரியின் முகத்தில் சரமாரியாக குத்தினான். சத்தம் கேட்டு ஓடி வந்த அதிகாரிகள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். காவல்துறை அதிகாரியை தாக்கியதாக அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply