சூர்யா பாணியில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்தவர் கைது!

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முகமது நூருல்லா பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

 

அண்மையில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஒரு லட்சம் ரூபாய் பணம் 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்தி போலீசார் தென்காசியை சேர்ந்த செந்தில்குமார், குணால், நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ், பொன்முடி ராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் முகமது நூருல்லாவின் உறவினர் ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பீரோவில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க ஆலோசனை வழங்கியது தெரியவந்தது.

 

இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முகமது நூருல்லாவின் உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உறவினர் ஒருவரே ஆட்களை ஏவி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply