ரூ. 605 கோடிக்கு மது விற்பனை..! வயிறு எரிகிறது என டாக்டர். ராமதாஸ் டுவீட்..! ‘ராவா’ குடிச்சா எரியத் தான் செய்யும் என நெட்டிசன்ஸ் கிண்டல்!!
வயிறுபொங்கலுக்கு ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியால்
வயிறு எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவீட் செய்ய, ‘ராவா’ குடிச்சா வயிறு எரியத் தான் செய்யும், அதிமுக கூட்டணில எதிர்பார்த்த பேரம் நிறைவேறாத கோபமா ? என்ற ரீதியில் எதிர்வினையாற்றி அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த தைப் பொங்கலின்போது, 3 நாட்களில் மட்டும் 605 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை ஆகியுள்ள செய்தி வெளியானது. இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டுவிட்டரில் வேதனையுடன் தமது கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில், இதுவரை இல்லாத அளவுக்கு பொங்எல் திருநாளில் 605 கோடி ரூபாய்க்கு மது விற்பனை என்ற செய்தியால் என வயிறு வேதனையால் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரிகிறது. அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி . எரிகிறது. இந்த அவலம் என்று தீரும்? என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு, ஆஹா.. டாக்டர் ஐயாவுக்கு தமிழ் சமூகத்தின் மேல் தான் என்னா அக்கறை? என பாராட்டுகள் குவியும் என்று தானே எதிர்பார்ப்போம். ஆனால் அதற்கு நேர்மாறாக டாக்டர் . ராமதாஸை ஏகத்துக்கும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாக்கி வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஐயா மருத்துவரே, ராவா குடிச்சி வயிறு எரியத் தான் செய்யும்… சோடா அல்லது தண்ணி மிக்ஸ் செய்யாமல் குடித்தால் வயிறு எரியும்… பீர் குடித்தால் கூலாக இருக்கும்.. எப்போதும் சரக்கு நினைப்புதானா?, ஒயின் குடிச்சா எதுவும் செய்யாது என்று ஒரு தரப்பில் கலாய்க்கின்றனர்.
மற்றொரு தரப்பிலோ எப்பவும் குடிசை தானே எரியும் ? இப்ப என்ன வயிறு எரியறது? என்றும் விமர்சிக்கின்றனர். அது மட்டுமின்றி சரக்கு விக்கிற அரசை நடத்தும் அதிமுக கூட்டணியில தானே இருக்கீங்க?.
மூடச் சொல்லலாமே? அதை விட்டு எதிர்பார்த்த பேரம் படியாமல் இப்படி எதிர்ப்பது போல பாசாங்கு காட்டறீங்களா? சீக்கிரம் எதிர்பார்த்தது அந்த பெட்டி வந்துரும்.. என்ற ரீதியில் எதிர்வினையாகத் தான் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




