பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய பெண் பறிகொடுத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்த கடவுச்சொல்லை இல்லாமல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவை சேர்ந்த நேகா சந்திரா என்ற பெண் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பாரிசுக்கு சென்றிருந்தார்.
அங்கு மெட்ரோ ரயில் பயணம் செய்தபோது அவரது பை திருடப்பட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே மூன்று தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடவுசொல்களை இல்லாமல் வங்கி கணக்கினை ஹேக் செய்து பணம் கொள்ளையடித்திருக்கும் இந்த சம்பவம் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இது தொடர்பாக வங்கியில் புகார் அளித்தும் ஆர்பிஐ விதிகளின்படி இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.






