திருவாடானையில் படகில் சென்ற சிறுவன் படகு கவிழ்ந்தது 6 வயது சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமம் கடற்கரை கிராமமாகும். இந்த கடற்கரையில் மாங்குரோவ் காடுகள் அதிகளவில் வளக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு ஏற்றதாக உள்ளது. இந்த சுற்றுலா தலத்தை பாரஸ்ட் துறையினர் பராமரிக்கிறார்கள்.

 

கடந்த 4 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் வெளியூரிலிருந்து வந்திருந்த மக்களும் திருவாடானை அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் ஒரு படகில் சென்று மாங்குரோஸ் காடுகள் மற்றும் மணல்திட்டை பார்த்து திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் விஷ்வா அஜித் என்ற ஆறு வயது சிறுவன் கடல் தண்ணீரை அதிகளவில் குடித்ததால் தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சைக்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 

இறந்தவரின் சடலம் திருவாடனை அரசு மருத்துவமனைக்கு பிண கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படகில் சென்ற 10 பேரும் லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு உபகரணம் அணிந்த நிலையிலும் சிறுவர்களுக்கு அந்த லைப் ஜாக்கெட் பொருந்தவில்லை. எனவே பெரியவர்களின் துணையோடு இருந்தாகவும் கூறப்படுகிறது.


Leave a Reply