தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்
நடிகை தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சமூக அரசியல் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு முன்பாக தீபிகாபடுகோன் தன்னிடம் ஆலோசனை பெற்றார்.

அவருக்கு பிரச்சினை இயலாது என்றும் குரு ராம்தேவ் தெரிவித்திருக்கிறார். ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்திற்கு தீபிகாபடுகோன் நேரில் சென்று ஆதரவளித்து இருந்தார். இதை சுட்டிக்காட்டி தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டுமென ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




