--- --:--:-- --

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

3

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், தலைவருமான எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப அறுவடை திருநாளில் விவசாயம் செழித்து நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் உயர்வு காண வாழ்த்துவதாக பாரிவேந்தர் தன்னுடைய வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

விவசாயத்திற்கு துணைநிற்கும் சூரியனையும், இயற்கையையும் வழிபடுவதுடன் விவசாயியின் உச்ச நண்பனாக உழைக்கும் மாடுகளை கௌரவிக்கும் மாட்டுப்பொங்கல் நாளையும் போற்றி வணங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon