திருச்சியில் 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி புரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி செல்லம், மகன்கள் நிகின், முகின் ஆகியோருடன் நேற்று திருச்சியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
அவரது உறவினர் ஒருவர் இரவு ஹோட்டலுக்கு வந்த போது அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் செல்லம்,நிகின், முகின் ஆகியோர் இறந்த நிலையிலும், செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த கோட்டை காவல் நிலைய போலீசார் உயிருக்கு போராடிய செல்வராஜை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஹோட்டலிலிருந்து செல்வராஜ் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் மனவளர்ச்சி குன்றிய தனது மகளை வளர்ப்பது, கடன் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.