நீண்ட தலைமுடியுடன் வலம் வரும் யானை

கோவை அருகே நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் நீண்ட தலைமுடியுடன் வலம்வரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

 

பல பகுதிகளில் இருந்து வந்துள்ள யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானை செங்கமலம் தனது சிகை அலங்காரத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதனை குளிக்க வைக்கும் போது அதன் தலை முடிக்காகவே சிறப்பு கவனம் எடுத்துக் கொள்கிறார்.


Leave a Reply