அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தில் இருக்கும் 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும், 528 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் நிதியில் அனைத்து பகுதிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளன.
உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநிலங்கள் வாரியாக போட்டிகள் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திறன்மிக்க கிராம இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.