இதுவரை 95% அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் காமராஜ்
தமிழ்நாட்டில் சுமார் 95 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 அட்டைதாரர்களுக்கு கடைசி நாளான இன்று பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். பரிசு தொகுப்பு வாங்காத அட்டைதாரர்கள் பரிசைப் பெற எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கடந்த 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. கரும்பு, சர்க்கரை, முந்திரி, வெள்ளம் உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




