டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, நடிகரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
டெல்லியில் உள்ள பிரபலமான ஜெ.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்கட்டணம், படிப்புக் கட்டணம் உயர்வைக் கண்டித்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 5-ந் தேதி மாலை பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷ் கோஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் காயமடைந்தனர்.
ஜெஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்தத் தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தள் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷ் கோஷ் உள்ளிட்ட 20 பேர் மீது மற்றொரு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தது சர்ச்சையானது
.
இதனால் ஜெஎன்யு மாணவர்கள் ப ல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களை பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து, காயமடைந்த மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஜெஎன்யு பல்கலை மாணவர்களை சந்தித்தார். காயம் Uம் ட மாணவர் சங்கத் தலைவர் அய்ஷ்கோஷையும் விடுதி வளாகத்தில் சந்தித்த உதயநிதி, ஜெஎன்யு பல்கலையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இப்பிரச்னை குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.






