உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் 7 ஒன்றிய தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. டிச.27, 30-ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி,
திருப்புல்லாணி ஒன்றியத்தில்
அதிமுக 5,
திமுக 5 ,
சுயே 3,
காங். ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.
கமுதி ஒன்றியத்தில்
அதிமுக 7,
திமுக 7,
சுயே. 3 ,
பாஜக 1,
தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

நயினார்கோவில் ஒன்றியத்தில்,
திமுக 4,
அதிமுக 4,
சுயேட்சை ஒரு இடத்திலும்,
முதுகுளத்தூர் ஒன்றியத்தில்
சுயேட்சைகள் 7,
அதிமுக 4
திமுக 4 வார்டுகளிலும் வென்றனர்
போகலூர் ஒன்றியத்தில்,
திமுக 5,
சுயே. 2,
பாஜக 1 இடத்திலும்,
ராமநாதபுரம் ஒன்றியத்தில்
திமுக 7,
அதிமுக 3,
காங் 1,
தேமுதிக ஒரு வார்டிலும்,
திருவாடானை ஒன்றியத்தில்
திமுக10,
காங் 4,
அதிமுக 3 ,
சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றன.

கடலாடி ஒன்றியத்தில்
அதிமுக 11,
திமுக 10,
சுயேட்சைகள் 4 லும்,
பரமக்குடி ஒன்றியத்தில்
திமுக 7
அதிமுக 6 இடங்களிலும்,
மண்டபம் ஒன்றியத்தில்
திமுக 10,
அதிமுக 4,
சுயே 3 ,
காங் 1,
பாஜக 1,
இந்திய கம்யூ ஒரு இடத்திலும், மேலும் ஒருவர்
போட்டியின்றியும் வெற்றி பெற்றனர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் திமுக 8,சுயே 4,அதிமுக 2 என வெற்றி பெற்றனர்.
இன்று நடந்த ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத்தேர்தலில்
நயினார்கோவிலில் வினிதா குப்புச்சாமி (அதிமுக),
பரமக்குடியில் சிந்தாமணி
முத்தையா (அதிமுக),
கடலாடியில் முத்து லட்சுமி (அதிமுக),
முதுகுளத்தூரில் தர்மர் (அதிமுக) வெற்றி பெற்றனர்.

ராமநாதபுரம் ஒன்றியத்தில்
த.பிரபாகரன் (திமுக),
திருப்புல்லாணியில்
சா.புல்லாணி (திமுக),
திருவாடானையில்
ப. முகமது முக்தார் ( திமுக),
கமுதியில் தமிழ்செல்வி(திமுக),
ஆர்.எஸ்.மங்கலத்தில் ராதிகா பிரபு (திமுக),
போகலூரில் சத்யா குணசேகரன் (திமுக),
மண்டபத்தில் சுப்பு லட்சுமி ஜீவானந்தம் (திமுக), ஆகியோர் வெற்றி பெற்றனர்.
17 கவுன்சிலர்களைக் கொண்ட மாவட்ட ஊராட்சியில்,
திமுக11, அதிமுக 4, காங்.,1, பாஜக 1 என வெற்றி பெற்றிருந்தனர். இன்று நடந்த மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவராக முன்னாள் எம்எல்ஏ, உ.திசை வீரன் (திமுக.,) வெற்றி பெற்றார். துணைத்தலைவராக வேலுச்சாமி(காங்.) தேர்வு செய்யப்பட்டார்.






