ஜப்பானின் பிரபல ஃபேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோ டவுன் சிஇஓ ஆக இருப்பவர் இஷா கோ. பெரும் கோடீஸ்வரர் ஆன இஷா கோ ஏற்கனவே தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கலைப்பொருட்கள், ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி சேகரிப்பது போன்ற இவருடைய செயல்களால் உலகம் முழுவதும் அவ்வப்போது பிரபலமடைவார்.
எலின் மிஷ்கிந்த் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு சுற்றுலா செல்ல பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்த போதே உலகமே இஷா கோவை உற்று நோக்கியது, பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும், தனி மனிதனின் வாழ்க்கையில் பணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள அவ்வப்போது ஆய்வு மேற்கொள்பவர் இஷா கோ.


அவரது ஆய்வின் ஒரு பகுதியாக தனது ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களுக்கு 6 லட்ச ரூபாய் பணத்தை வாரி வழங்கி உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளார். ஜனவரி 1-ஆம் தேதி தான் பதிவிடும் டிவீட்டை ரீடிவிட் செய்பவர்களில் ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 6.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் பேர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்தக் ட்வீட்டிலும் தெரிவித்திருந்தார். சொன்னபடியே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் நபர்களுக்கு ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து உள்ளார். எதிர்பாராத நேரத்தில் வழங்கப்பட்ட இந்த படம் சம்பந்தப்பட்டவர்களை எந்த அளவிற்கு மகிழ்ச்சி படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






