தெரியாமல் பெரிய தவறு நடந்துவிட்டது..! உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது நாங்களே..! ஈரான் ஒப்புதல் வாக்குமூலம்!!

கடந்த 8-ந்தேதி 176 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தமது நாட்டு ராணுவம் தான் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. தெரியாமல் நடந்த தவறு என்றும் இதற்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும், பிராயச்சித்தம் தேடுவதாகவும் ஈரான் பிரதமர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன் ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்க ராணுவம். இதற்கு பழி தீர்க்க, ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது கடந்த 8-ந்தேதி சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது ஈரான். இதில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலியாகினர். இந்த தாக்குதலால் அமெரிக்கா -ஈரான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது.

 

ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய அதே நாளில், அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானம், எந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக முதலில் கூறப்பட்டாலும், சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. அமெரிக்காவும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும், தம்மிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தது. உக்ரைன் நாடும் இதே சந்தேகத்தை எழுப்பியது.

 

முதலில் இதனை பிடிவாதமாக மறுத்து வந்த ஈரான், தற்போது சரணாகதி அடைந்து உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. மனித தவறால், உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி விட்டது. மன்னிக்க முடியாத இந்தத் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். இந்த தவறுக்கான பிராயச்சித்தம் தேடவும் தயாராக உள்ளோம் என ஈரான் நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.


Leave a Reply