தீபிகா படுகோனே நடித்துள்ள ஸ்கில் இந்தியா என்ற விளம்பரத்தை மத்திய அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோனே ஆதரவளித்தார்.
இந்தநிலையில் அவர் நடித்த விளம்பரத்தை மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் கைவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தொடர்பாகவும் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா தொடர்பான விளம்பரம் ஒன்றிலும் தீபிகா படுகோன் நடித்திருந்தார்.
அந்த விளம்பரம் மத்திய அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஷாம் சக்தி பவன் என்னும் அமைச்சராக அலுவலகத்திற்கும் இந்த வீடியோ விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மூத்த அமைச்சர் அதிகாரி ஒருவர் தீபிகா படுகோனேவின் விளம்பர வீடியோ கைவிடப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.