பொங்கல் திருநாளை முன்னிட்டு வேதாளை பொது மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை பொங்கல் தொகுப்புடன் ரொக்க தொகை வழங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, வேதாளை ஊராட்சி வடக்கு தெரு, குஞ்சார்வலசை, நடுமுனைக்காடு பகுதி பொதுமக்களுக்கு வேதாளை ஊராட்சிமன்றதலைவர் ஜெ.செய்யதுஅல்லாபிச்சை துவக்கி வைத்தார்.

வார்டு உறுப்பினர் சீனி அப்துல் ரஹ்மான், மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் முருகேசன், நாடார் சங்க நிர்வாகி தில்லை, மேற்கு தெரு ஜமாத் நிர்வாகி மாலிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆவலுடன் வாங்கி சென்றனர்.


Leave a Reply