ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு நெல் அறுவடை ஆரம்பம் விவசாயிகள் குதூகலம்

இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியது. ஆனால், காலப்போக்கில் அது மறைய தொடங்கியது. மேலும் இந்த மாவட்ட மக்கள் வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்து வந்தனர். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி தவித்த மக்களுக்கு சமீபத்திய பருவ மழையால் நெல் சாகுபடி அமோக விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்லையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பமாகி உள்ளது. இதனால் நடப்பாண்டு பொங்கல் விழா முழு மன நிறைவுடன் குடும்பத்துடன் கொண்டாட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இருந்தபோதும் தமிழக பாரம்பரிய நெல் ரகங்களான
வாடன் சம்பா,
முடுவு முழுங்கி,
களர் சம்பா,
குள்ளக்கார்,
நவரை,
குழிவெடிச்சான்
கார்,
அன்னமழகி,
இலுப்பைப்பூ சம்பா,
மாப்பிள்ளை சம்பா,
கருங்குறுவை,
கல்லுண்டை,
கருடன் சம்பா,
பனங்காட்டு குடவாழை,
சீரக சம்பா,
வாசனை சீரக சம்பா,
விஷ்ணுபோகம்,
கைவரை சம்பா,
அறுபதாம் குறுவை,
பூங்கார்,
காட்டு யானம்,
தேங்காய்ப்பூ சம்பா,
கிச்சடி சம்பா, நெய் கிச்சி
காணாமல் போனது வருத்தமளிக்கிறது என்கின்றனர்.


Leave a Reply