மல்லையா 9,000 கோடி கடனில் இதுவரை ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தவில்லை: மத்திய அரசு
வாங்கிய கடனில் விஜய் மல்லையா இதுவரை ஒரு ரூபாயைக் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி சென்றதை அடுத்து அவரது சொத்துக்களை முடக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
கடனை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும் தனது மற்றும் தனது உறவினர்களின் சொத்துக்களை முடக்கும் வேலைகளை நிறுத்த கோரியும் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா கடன்களை திருப்பி செலுத்துவதாக கூறினாலும், இதுவரை ஒரு ரூபாயைக் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசின் சார்பில் ஆஜரான ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை காரணம் காட்டி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கக் கூடாது என அவர் கூறி வருவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை காரணம் காட்டி உலகிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் விஜய் மல்லையா காலஅவகாசம் கூறுவதோ வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி மேற்கொள்ள கூடாது என தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




