நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு புதிய மனு

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அதனை கட்டாயமாக எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை மத்திய அரசே கட்டாயமாக்கியது.

 

மாநில பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

 

அதில் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரு தினங்களில் இருக்கும் நிலையில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.


Leave a Reply