புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!

புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டுமென வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த நன்னாளில் நல்லிணக்கம் மற்றும் நட்பு உணர்வுகளை அனைவரும் வளர்ந்தோங்க செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம் என அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்து வளமான தமிழகத்தை படைத்திட புத்தாண்டில் உறுதியேற்போம் என குறிப்பிட்டிருக்கிறார்.

 

அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புதிய ஆண்டும் புதிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் அள்ளி வழங்கும் இறைவனின் கொடையாக மலர்வதாக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

 

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் 2020 ஆம் ஆண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்றமிக நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் இந்த புத்தாண்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்வோம் என்று கூறியுள்ளார்.


Leave a Reply