“நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு” நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் புத்தாண்டு பரிசு!!

புத்தாண்டு பரிசாக இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு . எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. வகுப்புகளுக்கு கி.மீ.க்கு 4 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வை இன்று மாலை திடீரென அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம் . இந்த கட்டண உயர்வும் உடனடியாக இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்து, புத்தாண்டில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

இதன்படி, எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களில் இருக்கை, படுக்கை வசதிக் கட்டணம் கி.மீ. ஒன்றுக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புக் கட்டணம் கி.மீ.க்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்களில் ஏ.சி. வகுப்புக் கட்டணம் கி.மீ. ஒன்றுக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் புற நகர் மின்சார ரயில்களில் கட்டண உயர்வு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும்,ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


Leave a Reply