சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக ஆவுடையார் கோவிலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று கொண்டு இருந்தார்.

 

அப்போது அடம்பூர் என்ற இடத்தில் விபத்தின் காரணமாக இளைஞரொருவர் சாலையோரம் ரத்த காயத்தோடு மயங்கி கிடந்தார். இதனை கண்ட அமைச்சர் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி செய்து அறந்தாங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Leave a Reply