பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டில் அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தவீடு என்ற இலக்கை நோக்கி செல்வதாக அறிவித்த பிரதமரின் சொந்த வீடு வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி டுவிட்டரில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதில் வீடு வழங்கும் திட்டம் மகத்தான சாதனையை அடைந்திருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான நிர்வாகம், தொழில்நுட்ப பயன்பாடு, தீவிரமான செயல்பாடு போன்றவற்றால் ஒரு கோடி வீடுகள் வழங்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக குறிப்பிட்ட மோடி ஒவ்வொருவருக்கும் வீடு கிடைக்கச் செய்வதே தமது அரசின் தொலைநோக்குத் திட்டம் என்றும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.