குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட நார்வே பெண்!

கேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட நார்வே நாட்டு சுற்றுலா பயணி உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை நார்வே நாட்டை சேர்ந்த ஜெனி ஜான்சன் என்ற பெண் சுற்றுலா பயணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

 

இதனையடுத்து விசா விதிமுறைகளை மீறியதாகவும் அதனால் அவர் உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதையடுத்து தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.


Leave a Reply