இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்த தாய், குழந்தை பலி

இராமநாதபுரம் ஆர்.எஸ் மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவருக்கும், சத்திரக்குடி அருகே அரியகுடியைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்நிலையில், 10 மாத கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று மாலை பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் கீர்த்திகாவை , அவரது உறவினர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்த்துள்ளனர். அங்கு கீர்த்திகாவுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால் மயக்கமடைந்த கீர்த்திகாவின் உடல் நிலை மோசமானது. அப்போது பணியில் இருந்த செவிலியர்கள் இது குறித்து டாக்டர் மணிமொழியிடம் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.

 

டாக்டர் பரிசோதனையில் கீர்த்திகா உயிரிழந்தது தெரியவந்துள்ளது இதனையடுத்து டாக்டர் மற்றும் செவிலியர்கள் கீர்த்திகாவின் உறவினர்களை அழைத்து சமாதானம் செய்து கீர்த்திகாவின் உடலை ஒப்படைத்து நள்ளிரவில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இத்தகவல் உறவினர்கள் மத்தியில் தெரியவர மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவான சிகிச்சையால் கீர்த்திகாவும், குழந்தையும் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனையை இன்று காலை முற்றுகையிட்டனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply