முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
சுமார் 20,000 பதவிகளுக்கு தலைவர், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில் வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. ஓட்டு பதவிக்கான பொருட்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அதிகாரிகளுடன் இன்று வழங்கப்பட உள்ளன.
ஊரக உள்ளாட்சிகளில் 4 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் அளிக்க வேண்டும். இந்த வாக்குப்பதிவு வெப் கேமராக்கள், பறக்கும் படைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வாக்கு பதிவிற்கு தேவையான வாக்குப் பெட்டி உள்ளடங்கிய 72 பொருட்களை உரிய அலுவலர்கள் முறையாக அந்தந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் ராமன் 20 ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.