இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் – பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநில உரியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரில் உரி மற்றும் பீவா செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

 

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். பாகிஸ்தானில் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.


Leave a Reply