சூரிய கிரகணம்- மோடிக்கு கிடைத்த ஏமாற்றம்!

மேகக்கூட்டங்கள் சூழ்ந்ததால் அரிய சூரிய கிரகணத்தை தன்னால் நேரடியாக பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று நிகழ்ந்த வளைய வடிவ சூரிய கிரகணத்தை காண நாடெங்கிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

 

தாமும் சூரிய கிரகணத்தை காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

எனினும் மேகக்கூட்டங்கள் சூழ்ந்ததால் தன்னால் சூரிய கிரகணத்தை நேரடியாக காண முடியவில்லை என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, கேரள மாநிலம் கோழிக்கோட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தென்பட்ட சூரிய கிரகணத்தை தொலைக்காட்சி நேரலைகள் மூலம் கண்டதாகவும் கூறியுள்ளார்.

 

நிபுனர்களுடன் விவாதித்து சூரியகிரகணம் குறித்த தமது அறிவை வளர்த்துக் கொண்டதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Leave a Reply