--- --:--:-- --

(26.12.2019) வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்கள்

IMG-20191226-WA0009

ராசி பலன்கள்

மார்கழி -10

(26.12.2019) வியாழக்கிழமை

வருடம் -விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}

அயனம்  -தக்ஷிணாயணம்.

ருது -ஹேமந்த ருதௌ.

மாதம் -மார்கழி ( தனுர் மாஸம்)

பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம் காலை 11.21 AM. வரை. பிறகு சுக்ல பக்ஷம்.

திதி – அமாவாசை காலை 11.21 AM. வரை. பிறகு பிரதமை.

ஸ்ரார்த்த திதி -பிரதமை

நாள்- வியாழக்கிழமை { குரு வாஸரம் }

நக்ஷத்திரம் – மூலம் மாலை 05.47 PM. வரை. பிறகு பூராடம்.

யோகம் -சித்த யோகம் .

கரணம் -நாகவம், கிம்ஸ்துக்னம்.

நல்ல நேரம் -காலை 10.45 AM – 11.45 AM

ராகு காலம் – பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

எமகண்டம் – காலை 06.00 -07.30 AM.

குளிகை  காலை 09.00 -10.30 AM.

சூரிய உதயம் -காலை 06.27 AM.

சூரிய அஸ்தமனம் – மாலை 05.46 PM.

சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகஸீர்ஷம்.

சூலம் -தெற்கு.

பரிகாரம் – தைலம்.

இன்று -சூரிய கிரஹணம்.

ராசி பலன்கள்

🔯மேஷம் ராசி

 

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். குருமார்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தை அளிக்கும். வேலைக்காரர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

அஸ்வினி : இன்னல்கள் குறையும்.
பரணி : எண்ணங்கள் மேம்படும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்,

 

🔯ரிஷபம் ராசி

 

குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீடுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு குழப்பமான சூழலால் மந்தத்தன்மை நேரிடலாம். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சுபவிரயங்கள் உண்டாகலாம்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

கிருத்திகை : தலையீடுகளை தவிர்க்கவும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

 

🔯மிதுனம் ராசி

 

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவதற்கான சூழல் ஏற்படும். தொழில் சம்பந்தமான முயற்சியில் மேன்மையான சூழல் உண்டாகும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

 

🔯கடகம் ராசி

 

உத்தியோகம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். வழக்கு சம்பந்தமான செயல்பாடுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

புனர்பூசம் : சுபிட்சமான நாள்.
பூசம் : மனக்கசப்புகள் நேரிடலாம்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

 

🔯சிம்மம் ராசி

 

பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மகம் : இலாபம் கிடைக்கும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.

 

🔯கன்னி ராசி

 

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பெரியோர்களிடம் நற்பெயர்கள் கிடைக்கும். நீர்நிலை சம்பந்தமான துறையில் முன்னேற்றம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

 

உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : நற்பெயர்கள் கிடைக்கும்.
சித்திரை : முடிவுகள் சாதகமாகும்.

 

🔯துலாம் ராசி

 

புதிய திட்டங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் நேரிடலாம். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்ககு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : செலவுகள் நேரிடலாம்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

 

🔯விருச்சகம் ராசி

 

புதிய நபர்களின் அறிமுகத்தால் தனவரவுகள் மேம்படும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
அனுஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.
கேட்டை : பொருளாதாரம் மேம்படும்.

 

🔯தனுசு ராசி

 

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். உறவினர்களிடம் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

 

🔯மகரம் ராசி

 

தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செய்யும் வேலைகளில் பதற்றமின்றி கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

உத்திராடம் : தடைகள் அகலும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

🔯கும்பம் ராசி

 

எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உடல்நலத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சதயம் : துரிதம் உண்டாகும்.
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

 

🔯மீனம் ராசி

 

அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில முடிவுகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : சாதகமான சூழல் ஏற்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon