--- --:--:-- --

சுவர் இடுக்கில் சிக்கிக்கொண்ட சிறுவன்

10

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடுக்கில் சிக்கிக் கொண்ட 13 வயது சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு இருக்கிறான். முண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகன் நித்திஷ்.

 

நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக தூண் மற்றும் சுவர் இடையில் சிக்கிக் கொண்டுள்ளார். சிறுவனால் வெளியே வரமுடியாத நிலையில் செங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்கள் மூலம் சிறுவனை வெளியேற்ற முயன்றனர். அதில் சிக்கல் ஏற்படவே சுவரையும், தூணையும் உடைத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon