--- --:--:-- --

பதக்கத்தை வாங்க மறுத்த மாணவி? ஏன்?

3

குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராபிகா என்ற மாணவி தனது தங்கப்பதக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் 10 பேருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர் பெண்கள் அதிக அளவில் தங்கப் பதக்கம் மற்றும் பட்டம் பெறுவது எதிர்கால இந்தியாவை பிரதிபலிப்பதாக கூறினார்.

 

குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் சென்ற பிறகு அந்தந்த துறை தலைவர்கள் மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். அப்போது முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ராபிகா அப்துல்ரஹீம் என்ற மாணவி தனக்கான தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்தார். குடியரசு தலைவர் சென்ற பிறகே தாம் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பதக்கத்தை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

மாணவியின் செயலால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடரும் போராட்டம் காரணமாக பட்டம் வாங்க வந்த மாணவர்கள் அனைவரும் வழக்கத்திற்கு மாறாக தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டார்கள். போலீசாரும் பட்டம் பெறும் ஆடை அணிந்து மாணவர்களுடன் கலந்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon