அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். சென்னை கீழ்பாக்கம் புனித பாத்திமா தேவாலயத்தில் உள்ள கருணை இல்லத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலை முதலமைச்சரும், துணை முதலமைச்சர் பார்வையிட்டனர்.
பின்னர் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் பரிசுகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து அனைவரும் உணவருந்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




