சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளரின் பர்சை திருடிய இளம்பெண் கைது

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளரின் பர்சை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

 

புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த யமுனா என்பவர் கடையில் துணிகளை எடுத்து விட்டு பணம் செலுத்துவதற்காக பர்சை தேடியபோது காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் .தொடர்ந்து மேலாளரிடம் கூறி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அவரது பர்சை இளம் பெண் ஒருவர் திருடிச் சென்றது தெரியவந்தது.

 

மேலும் பர்ஷை திருடிய பெண் கடையின் உள்ளே சுற்றித்திரிந்த நிலையில் கடை ஊழியர்கள் அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து யமுனா அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவர் திருடிய 2770 பணத்தை பறிமுதல் செய்தனர்.


Leave a Reply