சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்!
டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் நடிகை, நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டன. 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்பட்ட மகாநடி படத்தில் நடித்த கீர்த்திசுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த தமிழ் படத்துக்கான விருது ஸ்ரேயா கிருஷ்ணன் இயக்கிய பாலம் என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. மனைவியை இழந்த இரவு காவலாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




