உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி மரியாதை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உயிரிழந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில் அமைச்சி அம்மன் கருப்பசாமிக்கு சொந்தமான கோவில்காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

 

இதனை அறிந்த கிராம மக்கள் உயிரிழந்த காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். அலங்காநல்லூர், பாலமேடு, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை வென்று குவித்த காளையை வாணவேடிக்கை முழங்க அதே பகுதியில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.


Leave a Reply