செல்போனில் பேசிக்கொண்டே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

புதுச்சேரியில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி சிவனந்தபுரம் வீதியில் பெற்றோருடன் செல்வி என்பவர் வசித்து வந்தார்.

 

திருமணமான இவர் திருப்பூரில் பணியாற்றிவரும் கணவருடன் நேற்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். வீட்டின் இரண்டாவது மாடியில் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்த கைப்பிடி சுவற்றில் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

 

சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்த பெற்றோர் செல்வி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இருப்பினும் உடனடியாக அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாடியிலிருந்து இளம்பெண் செல்வி சாலையில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply