--- --:--:-- --

புரோட்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

2

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவகம் ஒன்றில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விராலிமலையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே சிவசாமி என்பவரை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்போது அங்கு உள்ள உணவகத்தில் பரோட்டா போட்டுக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் பரோட்டா மாஸ்டரிடம் இருந்து கரன்டியை வாங்கி தானே பரோட்டாவை போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon