ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஆட்சியை கைப்பற்ற 41 இடங்களில் வெற்றி பெறவேண்டிய நிலையில், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 43 இடங்களிலும், பிற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 46 இடங்களிலும், பிற கட்சிகள் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ், சி வோட்டர்,ஏ பி பி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களிலும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 35 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 14 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.