--- --:--:-- --

முதல்வர், துணை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது

4

முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கோவையில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

தொலைபேசி மிரட்டல் வெறும் வதந்தி என்பதை கண்டறிந்த காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சகுந்தலா என்பவர் தமது உறவினரான பார்வதி என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon