போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட பிரபலங்களின் பட்டியல்! விராட் கோலி முதலிடம்!

2019 ஆம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள் ஈட்டும் வருமானம் மற்றும் மக்களிடம் அவர்களுக்கான பிரபலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகின்றது.

 

இதில் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் சல்மான் கானை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

இவரது ஆண்டு வருமானம் 252 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் விளம்பரங்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதில் சல்மான்கான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 13 ஆவது இடத்தையும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 16 வது இடத்தையும் பிடித்துள்ளனர். விஜய், அஜீத் ஆகியோர் முறையே 47 மற்றும் 52 ஆவது இடத்தில் உள்ளன. இதில் இயக்குனர் ஷங்கர் 55 ஆவது இடத்திலும், கமல்ஹாசன் 56 ஆவது இடத்திலும், தனுஷ் 64 ஆவது இடத்திலும் உள்ளனர்.


Leave a Reply