நீடிக்கும் போராட்டங்கள் – உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்து போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
டெல்லி லக்னோ உள்ளிட்ட இடங்களில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில் நாடெங்கும் போராட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் முன்னணி தலைவர்களோடு டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




